Brindavanam Ghosala

PremikaBrindavanam Gho shala



பசுவிற்கொரு வாயுரை

தெய்வமாகப் பூஜை பண்ணுவது இருக்கட்டும். அது சிலர் தான் பண்ண முடியும் ஆனால் எவரானாலும் பண்ண வேண்டிய கடமையாக ஒன்று இருக்கிறது. கோவுக்கு ஆஹாரம் போடுவது தான் அது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்குக் கைப்பிடி அளவு புல்லாவது கொடுக்கவேண்டும். கோ க்ராஸம் என்று இதை சாஸ்த்திரத்தில் சொல்லியிருக்கிறது. க்ராஸம் என்றால் ஒரு வாய் ஆஹாரம். கோ க்ராஸம் என்பதை வைத்துத்தான் புல்லுக்கு இங்கிலீஷில் grass என்ற பெயர் வந்திருக்கிறது. திருமூலர் திருமந்திரத்தில் ப்ரதி தினமும் ஜீவர்கள் செய்யவேண்டிய கடமைகளில், ஈச்வரனுக்கு ஒரு பச்சிலை, அதாவது வில்வ பத்ரமேனும் அர்ச்சிப்பது, ஒரு கைப்பிடியாவது ஆஹாரம் பிச்சை போடுவது ஆகிய இரண்டுக்கும் நடுவில் கோக்ராஸம் கொடுப்பதையும் சொல்லியிருக்கிறார்.

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை யாவர்க்குமாம் பசுவுக்கொடு வாயுறை, யாவர்க்குமாம் உர்ணும்போதொரு கைப்பிடி காயர்ககுணம் பிறர்க்கு இன்னுணதானே

மாற்றாரே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் - என நம் கோதை பிறாட்டியார் கூறியது போல, பசுக்கள் தான் நன்முடைய செல்வம், இதயே எாம வேதமும் விஸ்வரூபாஹாவு - முட்பத்துமுக்கோடி தேவதைகளும் பசு மாட்டில் வசிக்கிறார்கள் என்று நிர்ணயம் செய்கிறது. இவ்வளவு பெருமை வாய்ந்த கோமாதாவினை போற்றி பேணி பாதுகாப்பது நம் கடமை ஆகும். நமது மாதிரிமங்கலம் ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் ஆலய திருப்பணியின் ஓர் அங்கமாக ஸ்ரீ ப்ரேமிக ப்ருந்தாவனம்-கோசாலை சென்னை மாநகரத்திலும், மாதிரிமங்கலம் க்ஷேத்திரத்திலும் வெகு விமர்ணையாக அமைந்துள்ளது. கோ தாளம், கோ பூஜை செய்ய விரும்பும் அன்பர்கள் அனைவரும் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு பேரன்போடு

 

பசுவும் - புண்ணியங்களும்....!


There are no products to list in this category.